Friday, November 27, 2009

தமிழுக்கென்ன

தமிழுக்கென்ன
வந்தாரை வாழ வாழவைத்த தமிழ் என்று என்றும் சொல்வோம்
இருந்தாரைப் பற்றிக் கவலைப்பட்டோமா தெரியாது
நீச்சலைபோலே அள்ளும் வரை இந்த அமுதத்தின் சுவை தெரிவதில்லை
சுவை கண்டு விட்டாலோ மற்றவற்றை போற்றுவதில் மகிழ்ச்சியும் கொள்வதில்லை
இருந்த வரை பாரதிக்கு கிடைக்காத மதிப்பு
இன்று பா விஜய்க்குக் கூட கை தட்டச் சொல்கிறது
சங்கம் வளர்த்த தமிழ் இன்று சேனல்களில் வளராவிட்டாலும் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறது
சற்றே பெருமையும் சற்றே உவகையும் இருந்தாலும்
வேண்டியது வளர்ச்சி என்றால் வேண்டாமே தலைக்கனம்..